Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்``நியாயத்துக்கு மட்டும்தான் பல்லக்கு தூக்க வேண்டுமே தவிர..!" - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் |...

“நியாயத்துக்கு மட்டும்தான் பல்லக்கு தூக்க வேண்டுமே தவிர..!” – அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் | Sekar Babu press meet in Chennai regarding Aadheenam issues

திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறவிருந்த பட்டினப் பிரவேசம் நிகழ்வில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர வந்து கொண்டிருக்கிறது.  

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் வரும் 22-ம் தேதிதான் தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் நடைபெறவிருக்கிறது. தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பட்டினப் பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக ஆத்திகர்கள், நாத்திகர்கள் என இல்லாமல், அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதலமைச்சர் நல்ல முடிவை விரைவில் எடுப்பார். பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் எந்த பிரச்னையும் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்கிறோம். மக்களுக்கான அரசாக தி.மு.க அரசு செயல்படுகிறது” என்றார்.

சேகர்பாபு

சேகர்பாபு

அதையடுத்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `நானே பல்லக்கு தூக்குவேன்’ எனக் கூறினார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “யாருக்கும் யாரும் பல்லக்கு தூக்க கூடாது. நியாயத்துக்கு தான் பல்லக்கு தூக்க வேண்டும் என அவரிடம் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments