Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்நெஞ்சுக்கு நீதி: திரையரங்கில் குவியும் அமைச்சர்கள் முதல் திமுக தொண்டர்கள் வரை... என்ன நடக்கிறது?! |...

நெஞ்சுக்கு நீதி: திரையரங்கில் குவியும் அமைச்சர்கள் முதல் திமுக தொண்டர்கள் வரை… என்ன நடக்கிறது?! | what is the reason behind DMK Celebrating Nenjuku Needhi Movie?

“நெஞ்சுக்கு நீதியின் பேரனே! பாத்திரம் சொன்னது படத்தின் கதை, சூத்திரம் தந்தது விடியலின் விதை! நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அல்ல; நிலத்துக்கு நீதி தரும் வரைபடம்! நீண்ட வரலாற்றில் இடம்பெறும் ! நின் பெருமை நாளை வலம்வரும்! படக்குழுவிற்கு வாழ்த்துகள்”

-நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து மடல் இது. புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், காஞ்சிபுரம் மேயர், சட்டமன்ற உறுப்பினர், கரூர் மேயரும் முதல் நாளே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டார்கள். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஒருபடி மேலே சென்று ஒரு ஷோ-வுக்கான அனைத்து டிக்கட்டுகளையும் புக் செய்து இலவசமாக வழங்கப்படும் என நோட்டீஸே அடித்து வெளியிட்டுள்ளார். இவர்கள் மட்டுமல்ல மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் எனக் கட்சியினர் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து இந்தப் படத்தைப் பார்த்துச் செல்கிறார்கள். திரைப்படத்தைப் பார்க்க வருபவர்களுக்குப் பரிசுக் கூப்பன், மரக்கன்று, இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

நெஞ்சுக்கு நீதி - திமுகவினர் கொண்டாட்டம்

நெஞ்சுக்கு நீதி – திமுகவினர் கொண்டாட்டம்

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைத்த பெரம்பலூர் ஆயுதப் படை தலைமைக் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி முதல் நாளே பெரியளவில் அட்ராசிட்டியில் இறங்கி திரையரங்கங்களை அதிர வைத்துவிட்டார்கள் தி.மு.க-வினர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments