நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கிவருகிறது. இந்த குவாரியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென ராட்சத பாறை சரிந்து விழுந்தது. அப்போது, மூன்று ஹிட்டாச்சி இயந்திரங்களும் இரு லாரிகளும் அங்கிருந்தன. அவை பாறை சரிவில் மூழ்கின.
குவாரியில் பணியாற்றிக் கொண்டிருந்த டிரைவர்களான முருகன், விஜய், செல்வம், ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகியோர் பாறைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் முருகன், விஜய் ஆகியோர் நேற்று (15-ம் தேதி) மீட்கப்பட்டனர். ஹிட்டாச்சி இயந்திரத்துடன் பாறைக்குள் புதையுண்டு கிடந்த செல்வத்தை மீட்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.