வெடிக்க வைக்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணி தற்போது நடக்கிறது. அதன் பிறகே ராஜேந்திரனின் உடல் கிடக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியும் என தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துவிட்டனர். தீயணைப்புப்படையினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்குக் காரணமான குவாரியின் ஒப்பந்ததாரர் சங்கரநாராயணன், மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட நிலையில், குவாரியின் உரிமையாளரான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவந்தது.