படுதோல்வியை நோக்கி சிரஞ்சீவியின் ஆச்சார்யா – Chiranjeevi Acharya movie may face huse loss

படுதோல்வியை நோக்கி சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’

02 மே, 2022 – 12:36 IST

எழுத்தின் அளவு:


Chiranjeevi-Acharya-movie-may-face-huse-loss

கொரட்டலா சிவா இயக்கத்தில், சிரஞ்சீவி, ராம்சரண், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ‘ஆச்சார்யா’. சிரஞ்சீவியும், அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்த படம் என்பதால் இப்படம் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்தனர். மேலும், ராம்சரண் நடித்து வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் 1000 கோடி வசூலைப் பெற்றதாலும் அவர் நடித்து அடுத்து வெளிவந்த ‘ஆச்சார்யா’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். இருப்பினும் அனைத்தும் பொய்யாகிப் போனது.

பிரபாஸ் நடித்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான ‘ராதேஷ்யாம்’ பெற்ற பெரிய தோல்வியைப் போல ‘ஆச்சார்யா’ படமும் படுதோல்வியை அடையும் சூழ்நிலையில் உள்ளதாம். இந்தப் படம் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளது. மொத்தம் 80 கோடி வரை நஷ்டம் வரும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரோ, மெகா ஸ்டாரோ அது பெரிதல்ல, அவர்களே நடித்தாலும் படத்தில் கதை இருக்க வேண்டும் என்று தெலுங்கு ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை பெரிய நடிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.Source link

Leave a Comment

Your email address will not be published.