Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்“பதவியைப் பறிக்கொடுத்தும், படிப்பை முடித்த மாஜி” - பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்! |Interesting things...

“பதவியைப் பறிக்கொடுத்தும், படிப்பை முடித்த மாஜி” – பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்! |Interesting things happened during the madras university covacation

அதே போல் தமிழக சட்டமன்றத்தின் செயலாளராக உள்ள சீனிவாசனும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முதுகலை தமிழ் இலக்கியம் பட்டம் பெற்றுள்ள சண்முகம் தற்போது பெற்றுள்ள முனைவர் பட்டத்திற்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வில் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.

குறிப்பாக 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தமிழக அரசு செய்துள்ள பணிகள், அறிவிக்கப்பட்ட விருதுகள், தமிழ் மொழியை நவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். இவருக்கு வழிகாட்டியாக பேராசிரியர் ஓப்பிலான் மதிவாணன் இருந்துள்ளார். தமிழில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த சீனிவாசனுக்கு நீண்ட நாட்களாகவே முனைவர் பட்டத்தைப் பெறவேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இப்போது ஐம்பது வயதை தாண்டிநிலையிலும் படிப்புக்கும் வயதுக்கும் தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டு முனைவர் பட்டம்பெற்றுள்ளார்.

சண்முகம் ஐ.ஏ.எஸ் -முனைவர் பட்டம்

சண்முகம் ஐ.ஏ.எஸ் -முனைவர் பட்டம்

அதேபோல்தான் எந்த துறைக்கு அமைச்சராக இருந்து இன்று மாஜி அமைச்சராக மாறிய பின்பும் ஒரு மாணவராக தன்னை தகவமைத்து கொண்டுள்ளார் மாஜி அமைச்சர் பழனியப்பன். முதுகலை தாவரவியல் மாணவராக இருந்த பழனியப்பன் உயர் பதவியில் இருந்தாலும் படிப்புக்கு பதவி ஒரு தடையல்ல என்பதை உணர்த்தும் வகையில் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

ஒரு அதிகாரியாக ஒருதுறையில் திட்டங்களை செயல்படுத்தபோதும் அதில் ஆய்வுசெய்தால், இன்னும் பலன் தரும் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்கிற ஆர்வத்தினால் ஆய்வு செய்ய ஆரம்பித்து,இப்போது முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் முதல்வரின் செயலாளர் சண்முகம் .

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments