Wednesday, June 29, 2022
Homeசினிமா செய்திகள்பதான், பிரம்மாஸ்திரா, ராம் சேது - பாலிவுட்டில் உருவாகி வரும் டாப் 10 பிரமாண்ட படங்கள்!...

பதான், பிரம்மாஸ்திரா, ராம் சேது – பாலிவுட்டில் உருவாகி வரும் டாப் 10 பிரமாண்ட படங்கள்! | Photo Story

கங்குபாய் கத்தியவாடி, அட்டாக் – பார்ட் 1 போன்ற படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் களமிறங்க இருக்கும் பிக் பட்ஜெட் படங்கள் பற்றிப் பார்ப்போம்.

Prithviraj ராஜஸ்தானை ஆட்சி செய்த புகழ்பெற்ற மன்னர் பிரித்விராஜ் சௌகான் வரலாற்றை பிரமாண்டமாக படமாக்கி உள்ளனர். அக்ஷய் குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி ஷில்லார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் ஜூனில் வெளியாகிறது.

Brahmastra ரன்பீர் – ஆல்யா திருமணத்துக்கு முன்பு இருவரும் சேர்ந்து நடித்த படம். அயன் முகர்ஜி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் திட்டமிடப்பட்டு, மூன்று பாகங்களாக எடுக்கப்படும் படத்தின் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாகிறது.

Shamshera வரலாற்று பின்புலத்தில் எடுக்கப்படுகிற இந்தப் படம் 1800களில் ஆங்கிலேயரை எதிர்த்த இனக்குழுவை பற்றிய கதையை மையமாகக் கொண்டது. ரன்பீர் கபூர், சஞ்சய் தத், வாணி கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Laal Singh Chaddha ஆமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா நடிக்க 1994-ல் வெளியாகிய Forrest Gump என்கிற அமெரிக்க படத்தின் ரீமேக் இது. காமெடி எண்டெர்டெயினராக உருவாகியிருக்கும் படம் ஆகஸ்டில் வெளியாக உள்ளது.

Adipurush பாகுபலி பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படம். ராமாயணத்தை தழுவி உருவாக்கப்படும் இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தியில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. சயிஃப் அலி கான்தான் இராவணன். க்ரீத்தி சனோன் சீதா.

Dhaakad பாலிவுட் குயின் கங்கனா ரணாவத்தின் ஆக்சன் நிறைந்த ஸ்பை திரில்லர் படம். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.

Tiger 3 ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்த டைகர் படங்களின் வரிசையில் அதன் மூன்றாவது பாகம் இது. சல்மான் கான், இம்ரான் ஹாஷ்மி, கத்ரீனா கைப் ஆகியோர் நடிக்கின்றனர். 2023-ல்தான் படம் ரிலீஸ்.

Pathan ஷாரூக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் என நட்சத்திரங்கள் களமிறங்கும் பதான் படம், ஒரு RAW ஏஜென்ட்டின் கதை. இதில் சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

Maidaan அஜய் தேவ்கன் நடித்திருக்கும் மைதான் படம் இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலம் எனச் சொல்லப்படுகிற 1952 -1962 காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பிரியாமணி இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜூனில் படம் வெளியாகிறது.

Ram Setu அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் சேர்ந்து நடித்த ஆக்ஷன் அட்வெஞ்சர் படம். 2022 தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. ராமர் பாலம் (ராம் சேது) உண்மையா, பொய்யா என்பதை ஆய்வு செய்யும் சாகசப் படம் இது.

தென்னிந்திய பெரிய பட்ஜெட் படங்கள் பான் இந்தியா படங்களாக இந்தி சினிமாவை ஓரங்கட்டியுள்ள நிலையில், பாலிவுட்டும் வெயிட்டாகாவே இந்தப் போட்டியில் களமிறங்க இருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments