இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பல வாரங்களாகவே இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அரசியல் நெருக்கடியில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், போராட்டக்களம் கலவரக்கலமாக மாறியது.
நேற்றிரவு மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு கலவரத்தில் தீக்கிரையாகியது. மேலும், பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இலங்கை விமான நிலையங்களையெல்லாம், முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.