Thursday, June 30, 2022
Homeஜோதிடம்பல்லக்கில் பவனி வருவது ஏன் இத்தனை சர்ச்சையாகிறது! - வரலாறு சொல்லும் தகவல்கள் என்ன? |...

பல்லக்கில் பவனி வருவது ஏன் இத்தனை சர்ச்சையாகிறது! – வரலாறு சொல்லும் தகவல்கள் என்ன? | the row over pattina pravesam function in dharmapura aadheenam – points to consider

`பல்லக்கு பவனி’ சர்ச்சை குறித்து ஆன்மிக அன்பர்கள் சிலரிடம் பேசியபோது, ”மனிதர் சுமக்காமல் எந்த மனிதரும் பிறப்பதும் இல்லை; வளர்வதும் இல்லை; மறைவதும் இல்லை. கல்யாணம் முடிந்ததும் மணமகள் பல்லக்கில் ஏறி கணவன் வீடு புகுவது மரபாக இருந்தது. இன்றும் பல திருமணப் பத்திரிகைகளில் பல்லக்குப் படம் இருக்கும் பாருங்கள். யார் யாரைச் சுமப்பது என்பது அவரவர் தனி விருப்பம். அதில் மற்றவர்களின் கருத்துகளுக்கு இடமில்லை.

சபரிமலை, அகோபிலம், சதுரகிரி போன்ற மலைசார்ந்த தலங்களில் எல்லாம் மலை ஏற இயலாதவர்களை டோலியில் சுமந்து செல்லும் வழக்கம் உண்டு. அதையும் தடை செய்வார்களா!

இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு மரியாதை. பல்லக்கு சுமக்கும் அந்த 26 சீர்பாதம் தாங்கிகள் மனம் விரும்பியே இது நடக்கிறது. ‘ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத…’ என்று குரு சேவையின் பெருமையைக் குறிப்பிடுகிறது திருப்புகழ். ‘சிவிகை பொறுத்தான், ஊர்ந்தான் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு, அறத்தின் பயனால் விளைந்தது எனச் சொல்ல வேண்டாம்’ என்கிறது திருக்குறள். பல்லக்கு ஒன்றும் சுமை இல்லை.

சேகர்பாபு

சேகர்பாபு

அதிகாரத்தையும் பணத்தின் பகட்டையும் காட்டும் வகையிலான பல்லக்கு பவனிகளை நிறுத்தலாம். அது வேறு விஷயம். இது குருமரியாதை, மரபு சார்ந்த வைபவம். இதில் அரசு தலையிடுவது பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயல். சமயம் சார்ந்த நடைமுறைகளில் அரசு தலையிடுவதற்கு ஓர் எல்லை இருக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

பட்டணப் பிரவேச நிகழ்வை எதிர்ப்பவர்களோ, ”ஆன்மிக மரபுகள் காலத்துக்கு ஏற்றபடி மாற வேண்டும். அப்போதுதான் அவை மதிப்பு பெறும். வாகன வசதி இல்லாத காலங்களில் பல்லக்கு பவனி வந்தது சரி. இப்போது ஆதீனங்கள் வாகனங்களில்தான் பயணம் செய்கிறார்கள். ஆதீனங்களிலும் மடங்களிலும் எத்தனையோ நவீன மாற்றங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் குருமார்கள், மற்ற விஷயங்களிலும் மாற வேண்டும். காஞ்சி மகா பெரியவர் தன் மேனா பல்லக்கைத் துறந்துவிட்டு பாத யாத்திரையாகவே பயணம் செய்து எல்லோருக்கும் முன்னுதாரண புருஷராக இருந்தார். அவர் காட்டிய வழியில் ஆதீனங்களும் ‘இனி எங்களை யாரும் பல்லக்கில் சுமக்க வேண்டாம்’ என்று அறிவித்துவிட்டால் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்துவிடும்” என்கிறார்கள்.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக விரைவில் சுமுக முடிவு எடுக்கப்படும். நாத்திகர்கள், ஆத்திகர்கள் என அனைவரின் மனமும் குளிரும் வகையில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார். தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நடக்க பேச்சுவார்த்தை நடக்கிறது” என்று அறிவித்திருக்கிறார்.

இந்த சர்ச்சை விரைவில் தீரும் என்று நம்புவோம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments