Saturday, July 9, 2022
Homeஉலக செய்திகள்பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தைக் கட்டிய சீனா?! - என்ன செய்யப் போகிறது மத்திய...

பாங்காங் ஏரியின் குறுக்கே இரண்டாவது பாலத்தைக் கட்டிய சீனா?! – என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | did China builds the second bridge in Pangong lake

ராகுல் காந்தி கேள்வி

மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக்கு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “பாங்காங்கில் முதல் பாலத்தை சீனா கட்டுகிறது என்ற செய்தி வந்தபோதும், நிலைமையை கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியது. இப்போது 2-வது பாலத்தை சீனா கட்டும்போதும், அதே போல கண்காணித்து வருவதாக இந்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் எந்தவிதமான விட்டுக்கொடுக்கும் போக்கும் இருக்கக் கூடாது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதுபோன்ற விஷயங்களில் உரிய நேரத்தில் சரியான பதிலடியை அளிக்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் முக்கியமான கடமை. ஆனால், மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல் பாலம் கட்டியதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் சீனா 2-வது பாலம் கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments