“பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் அனைவருடனும் இணைந்து செல்ல விரும்புகிறது..!” – மல்லிகார்ஜுன் கார்கே | Congress senior leader Mallikarjun Kharge says, congress wants tie-ups with everyone for against BJP

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்துதல் மற்றும் கட்சியின் நிலைமையை சீர்படுத்தும் விதமாக காங்கிரஸ், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 3 நாள் சிந்தனை அமர்வு கூட்டத்தை நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, ராஜ்ய சபா எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உட்பட காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதிக்கும் குழுவுக்குத் தலைமை வகிக்கும் மல்லிகார்ஜுன் கார்கே, பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணி அமைப்பது பற்றி தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சோனியா - ராகுல்

சோனியா – ராகுல்

இதுகுறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “முதலில் நாங்கள் எங்கள் கட்சியை சரியாக அமைக்க விரும்புகிறோம். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸை மேலும் சுறுசுறுப்பாகவும், மேலும் சக்திவாய்ந்தாகவும் மாற்ற விரும்புகிறோம். பிறகு தான் மற்றவர்களிடம் செல்வோம். உங்களிடம் முதலீடு இல்லையென்றால் யார் தான் வருவார். எனவே பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் அனைவரையும் ஒன்றாக அழைத்துச்செல்லவே விரும்புகிறது. சில முன்மொழிவுகளுடன் நாங்கள் முன்வருவோம், யார் இந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் செல்வோம். மேலும், அரசியல் விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்களுடன் நாங்கள் செல்வோம். இது இந்திய தேசியவாதிகளுக்கும் போலி தேசியவாதிகளுக்கும் இடையிலான சண்டை” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.