எனவே, மதமாற்றத்தைத் தடுக்கவும் ஒரு சட்டம் இங்கு இருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் நீதிமன்றமும் உள்ளது. ஆனாலும், புதிய அவசரச் சட்டம் ஏன்… பா.ஜ.க-வுக்கு காவல்துறை, நீதிமன்றம் என்ற அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லையா… பிறகு புதிய சட்டத்தின் அவசியம்தான் என்ன… சிறுபான்மையினரை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும்தான் ஒரே காரணம்.
தனிநபர்கள் எந்த மதத்துக்கும் சுதந்திரமாக மாறுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. மதமாற்ற தடைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அரசால் அச்சுறுத்தப்படும் அனைவருக்கும் எங்கள் கட்சி உறுதியாக துணை நிற்கும்” என விளக்கமளித்தார்.
இந்தக் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் மூலம் கட்டாய மதமாற்றத்துக்கு 25,000 ரூபாய் அபராதத்துடன் 3-5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், 18 வயது பூர்த்தியடையாதவர்கள், பெண்கள், பட்டியலினத்தோர், பழங்குடியினரை மதம் மாற்றினால் 3-10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வெகுஜன மதமாற்றத்துக்கு 3-10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்தச் சட்டம் முன்மொழிகிறது.
மேலும், மதம் மாற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 60 நாள்களுக்கு முன்னதாகவும், மதம் மாறிய 30 நாள்களுக்குள் துணை ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.