Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்``பாஜக-வின் புல்டோசர் அரசியல் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு!" - அரவிந்த் கெஜ்ரிவால் | Arvind...

“பாஜக-வின் புல்டோசர் அரசியல் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு!” – அரவிந்த் கெஜ்ரிவால் | Arvind Kejriwal says, BJP’s bulldozer politics is the greatest destruction of independent India

தேசிய தலைநகரான டெல்லியில், சட்டமன்றத்தில் ஆம் ஆத்மியும், மாநகராட்சி அதிகாரத்தில் பாஜக-வும் இருந்து வருகின்றன. உள்ளாட்சியில் பா.ஜ.க, மாநில ஆட்சியில் ஆம் ஆத்மி என இரு கட்சிகள் இருப்பதாலேயே, அடிக்கடி இந்த இரு கட்சிகளுக்கிடையே அரசியல் மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் ஜஹாங்கிர்புரியில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த போதும், சில கட்டடங்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டன. ஜஹாங்கிர்புரி மட்டுமல்லாமல், நியூ ஃப்ரண்ட்ஸ் காலனி, துவாரகா என டெல்லியின் பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக-வின் இத்தகைய புல்டோசர் அரசியலை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்

புல்டோசர்

புல்டோசர்

அந்த வீடியோவில், “டெல்லி மாநிலமானது திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப்படவில்லை. டெல்லியில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோதமானவை எனக் கூறலாம். அப்படியானால் டெல்லியின் 80 சதவிகிதத்தை அழித்துவிடுவீர்கள் என்று அர்த்தமா? அதாவது, 63 லட்சம் மக்களின் வீடுகள், கடைகள் போன்றவை புல்டோசர்களால் தகர்க்கப்படும். இது சுதந்திர இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய அழிவாக இருக்கும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மியால் பொறுத்துக்கொள்ள முடியாது. டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 வருடங்களாக பா.ஜ.க அதிகாரத்தில் இருந்தது, பணம் வாங்கியது. தற்போது அவர்களின் பதவிக்காலம் மே 18-ம் தேதியுடன் முடிகிறது. இப்படியிருக்க இவ்வளவு பெரிய முடிவுகளை எடுக்க உங்களுக்கு சட்ட அதிகாரம் உள்ளதா? தேர்தல் நடக்கட்டும். அதில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வரும் என்பது அனைவருக்குமே தெரியும்” என கெஜ்ரிவால் பேசியிருந்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments