Sunday, June 19, 2022
Homeசினிமா செய்திகள்பாடினி நிலவின் பாதி நீ..: நடிகை பாதினி குமார்

பாடினி நிலவின் பாதி நீ..: நடிகை பாதினி குமார்

‘பாடினி’ நிலவின் பாதி நீ..: நடிகை பாதினி குமார்

01 மே, 2022 – 11:15 IST

எழுத்தின் அளவு:


serial-actress-exclusive-interview

பெண்மை உன்னில் உறவாடும் மயிலிறகின் மென்மை… ஜொலிக்கும் தேகமெங்கும் கோலார் தங்கத்தின் தன்மை… இருந்தும் இல்லாத இடையில் இழையோடும் பொய்மை, விழிக்கடலில் கருப்பு கரையாகி கலந்தாடும் கண் மை… என ஆடை சூடிய நிலவின் பாதியாக அழகை அள்ளி குடித்த இளமை துள்ளும் நடிகை பாடினி குமார் பேசுகிறார்…

சினிமா, சீரியல்களில் எப்படி நடிக்க வந்தீர்கள்
சொந்த ஊர் நெல்லை… பிறந்து, வளர்ந்தது சென்னை. ‘கார்டியாக் டெக்னாலஜி’ படித்து விட்டு மருத்துவமனையில் வேலை பார்த்தேன். சின்ன வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால் வாய்ப்பு தேடினேன்… ஒரு வழியாக நடிகையாக என்ட்ரி கொடுத்தாச்சு.

முதலில் நடிகையாக களமிறங்கியது சினிமாவா
இல்லை… ‘நாயகி’, ‘திருமணம்’ சீரியல்களில் நடித்தேன். சினிமாவில் நடிக்க சீரியல் நடிப்பு ஒரு அனுபவத்தை கொடுக்கும்னு எதிர்பார்த்து போனேன். அது நல்லபலன் கொடுத்திருக்குது. இப்போது ‘டேக் டைவர்சன்’ என்ற படத்தில் மெயின் கேரக்டர் பண்றேன்.

‘டேக் டைவர்ஷன்’ வாய்ப்பு வேட்டை குறித்து…
படக்குழுவினர் கர்லி ஹேர் பொண்ணு இருந்தால் நடிக்க வைக்கலாம்னு தேடிய போது ஒரு போட்டோ ஷூட்டில் என்னை செலக்ட் பண்ணி ஆடிஷன் வைச்சு ஓ.கே., பண்ணினாங்க. அடுத்த மாதம் படம் ரிலீஸ்.

அது தமிழ் படம் தானா… என்ன கதை, கேரக்டர்
ஆமா தமிழ் படம் தான்… 70 கிட்ஸ், 90 கிட்ஸ், 2கே கிட்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது தான் கதை. நான் 2 கே கிட்ஸ்சா நடிச்சிருக்கேன். கதை முழுவதும் சென்னை டூ புதுச்சேரி டிராவலில் தான் இருக்கும். ஜான் விஜய், ஜார்ஜ் விஜய், ராம் கூட நடிச்சிருக்காங்க.

நீங்கள் நடித்து கலக்கப்போகும் அடுத்த படங்கள் சில படங்கள் பேசிகிட்டு இருக்கேன்… ஹாட் ஸ்டாருக்கு 2 படம், 2 வெப்சீரியஸ் நடிக்கிறேன். கொலாப் போட்டோ ஷூட்ஸ், ஆட் ஷூட்ஸ் பண்றேன். வழக்கமான பிரைடல் ஸ்டைல் பண்ணாமல் வித்தியாசமான ஷூட்ஸ் தான் பண்ணுவேன்.

எந்த மாதிரியான கேரக்டர்களை விரும்புகிறீர்கள்
கதை எப்படி இருந்தாலும் கேரக்டர் சவாலானதாக இருக்கனும். அதில் நடிகையா என்னை நிரூபிக்கனும். கேரக்டருக்காக கிளாமர் தேவை என்றால் ஓரளவு பண்ணுவேன். அதுக்காக ‘பிகினி’ வரை போக மாட்டேன்.

நடிப்பு மட்டும் தானா தனி திறமைகள் ஏதாவது
சிங்கர் வேல்முருகன் மனைவி கலாவிடம் பரதம் கற்றேன். பரதம் ஆட கற்றதால் இப்போ எல்லாவித டான்ஸ்களும் ஆடுறேன். வீட்டில் இருக்கும் போதும் ஆடிகிட்டே தான் இருப்பேன். டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அதென்னங்க ‘பாடினி’. பெயர் காரணம் என்னவோ
பாடினி என்றால் ‘இசை கலையின் அரசி’ என பொருள். அது மட்டுமல்ல பெற்றோர் தமிழ் ஆர்வலர்கள். அதனால் குடும்ப நண்பரான தமிழறிஞர் அருணாசலம் ‘இவளுக்கு காக்கா போல் கிடைத்ததை பிறர்க்கு கொடுக்கும் குணம் இருப்பதால் காக்கையை போற்றி பாடிய ‘காக்கை பாடினியார்’ நினைவாக பாடினி என பெயர் வைப்போம்’ என வைத்தார்.Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments