கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்முடி பேசும்போது, “இன்று 1,04,281 பெண்கள் பட்டம் பெறுகின்றனர். அந்த அளவுக்கு உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
`கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என பாரதியார் பாடியிருக்கிறார். முதல்வர் போடும் திட்டங்களைப் பார்த்தால் அனைத்திலும் பெண்கள்தான் இருப்பார்கள். ஆண்களுக்குச் சலிப்புதட்டும் அளவுக்கு பெண்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.