பாமக 2.O ; 2024 டு 2026… ‘பாட்டாளி நலக் கூட்டணி’ – அன்புமணியின் திட்டம் என்ன? | What are the new strategies of PMK youth wing leader Anbumani Ramadoss?

`எங்க கட்சியில இவ்வளவு நாள் நாங்க எதிர்பார்த்துட்டு இருந்த விஷயம் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா நடக்கத் தொடங்கியிருக்கு. நாங்க என்னதான் கீழ்மட்ட அளவுல கட்சி வேலைகள் செஞ்சாலும், தமிழ்நாட்டு மக்கள் தலைவர்கள் அடையாளத்துக்குப் பின்னாடி போற பழக்கமுடையவங்க. ஐயாவால இதுக்குமேல எல்லா இடத்துக்கும் அலைஞ்சு திரிஞ்சு போக முடியாது. ஆனா, சின்னய்யா அன்புமணி ஏன் இப்படி இருக்கார்’னு ரொம்ப வருத்தப்பட்டோம். ஆனா, இப்போ அவர்கிட்ட உண்மையிலேயே மாற்றம் தெரியத் தொடங்கியிருக்கு…இனி நாங்களும் எந்தக் கவலையும் இல்லாம வேலைகளைத் தொடங்குவோம்” மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு

திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வருவதே அவர்களின் தற்போதைய உற்சாகத்துக்குக் காரணம். இதுவரை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், மயிலாடுறை என வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாவட்ட அளவில் நடக்கும் பொதுக்குழுவில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். “அனைத்து கிராமங்களிலும் பா.ம.க., கொடி ஏற்றப்பட வேண்டும். 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு கட்சிகளையும் போதும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். கன்னியாகுமரி, தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்ட மக்களும் பா.ம.க., வை விரும்புகின்றனர். ஏனெனில் தகுதி, செயல் திட்டம் என அனைத்தும் பா.ம.க., விடம் உள்ளது.

Source link

Leave a Comment

Your email address will not be published.