Saturday, July 2, 2022
Homeஅரசியல் செய்திகள்``’பார்க்க பசி போல் தெரிகிறது', மயிலுக்காக முக்கியக் கூட்டத்தை பாதியில் நிறுத்திய மோடி” - அமித்...

“’பார்க்க பசி போல் தெரிகிறது’, மயிலுக்காக முக்கியக் கூட்டத்தை பாதியில் நிறுத்திய மோடி” – அமித் ஷா | Union Home Minister Amit Shah remember one incident with PM modi

பிரதமர் மோடியின் அரசியல் பயணம் குறித்து, `ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’ என்ற பெயரில் புத்தகம் ஒன்று டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடனான ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை அமித் ஷா பகிர்ந்துகொண்டார்.

அந்த நிகழ்வை நினைவுகூர்ந்த அமித் ஷா, “பிரதமர் மோடி மற்றவர்களைப்போல் அல்லாமல், இயல்பிலேயே மிகவும் அக்கறை மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய தன்மையுடையவர்.

`ட்ரீம்ஸ் மீட் டெலிவரி'

`ட்ரீம்ஸ் மீட் டெலிவரி’

இதற்கான சிறிய நிகழ்வை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். அப்போது நான் தான் கட்சியின் தலைவர். மோடி அலுவலகத்தில் அன்று ஒரு முக்கிய கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, மயில் ஒன்று தன் அலகால் 2-3 நிமிடங்களாக விடாமல் ஜன்னல் கண்ணாடியை கொத்திக்கொண்டிருந்தது. திடீரென மோடி சிறிது நேரம் பேச்சை நிறுத்திவிட்டு, ஊழியர் ஒருவரை அழைத்து, இந்த மயிலுக்கு இன்னும் உணவு வைக்கவில்லை. கொஞ்சம் உணவு வையுங்கள், பார்க்கப் பசியாகத் தெரிகிறது என கூறினார். ஒரு முக்கியமான கூட்டத்தின்போது கூட இதைப்பற்றி மோடி கவலைப்படுகிறார், என்பது அவர் எவ்வளவு உணர்ச்சிவசமானவர் என்பதை காட்டுகிறது” என கூறினார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments