பாலியல் வழக்கு: நடிகை காவ்யா மாதவனிடம் வீட்டுக்கே சென்று விசாராணை! – அடுத்தது என்ன?

கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு காரில் கடத்தி, பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக வேகம் எடுத்து சென்றுகொண்டிருக்கிறது. இயக்குநர் பாலச்சந்திரகுமார் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தார். பாலச்சந்திரகுமார் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் திலீபின் 3 செல்போன்கள் உள்பட 6 செல்போன்களை ஆய்வு செய்தபோது இந்த வழக்கில் திலீபின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளதாக சில ஆதராங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவ்யா மாதவனுக்கு கொச்சி கிரைம் பிரான்ச் போலீஸார் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

காவ்யா மாதவனிடம் விசாரணை

காவ்யா மாதவனுக்கு அனுப்பிய முதல் நோட்டீஸில் தேதி குறிப்பிடாமல் உங்களுக்கு விருப்பமான தேதியில் விசாரணைக்கு ஆஜராகலாம் என போலீஸார் கூறியிருந்தனர். ஆனால், சென்னையில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என காவ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவதாக அனுப்பிய நோட்டீஸில் தேதி குறிப்பிட்டு ஆலுவா போலீஸ் கிளப்பில் ஆஜராகும்படி கூறியிருந்தனர். விசாரணைக்கா ஆலுவா போலீஸ் கிளப்பில் வரமுடியாது என காவ்யா தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் கிரைம் பிரான்ச் ஏ.டி.ஜி.பி திடீரென மாற்றப்பட்டு, பூதிய அதிகாரி நியமிக்கப்பட்டதால் விசாரணை சற்று காலதாமதமானது. அதன் பிறகு மீண்டும் காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மூன்றாவதாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு பதிலளித்த காவ்யா மாதவன், என் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்துவதாக இருந்தால் ஒத்துழைப்பு அளிக்கலாம் என கூறியிருந்தார். நடிகை பாலியல் வழக்கு மீதான விசாரணையை இம்மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் காலதமதத்தை தவிர்க்க போலீஸார் முடிவு செய்தனர்.

காவ்யா மாதவன்

அதன்படி நேற்று கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி பைஜூபவுலோஸ் தலைமையிலான போலீஸார் ஆலுவாவில் உள்ள நடிகர் திலீபின் பத்மசரோவரம் வீட்டுக்குச் சென்று காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் விசாராணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் காவ்யா மாதவனின் சில பதில்களில் சந்தேகம் இருப்பதாகவும், தேவையானால் மீண்டும் காவ்யா மாதவனிடம் விசாராணை நடத்தப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

Your email address will not be published.