Friday, June 17, 2022
Homeஅரசியல் செய்திகள்பா.ஜ., யாரையும் காப்பாற்றாது மாநில தலைவர் திட்டவட்டம்| Dinamalar

பா.ஜ., யாரையும் காப்பாற்றாது மாநில தலைவர் திட்டவட்டம்| Dinamalar

பல்லாரி:”எஸ்.ஐ., தேர்வு முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பா.ஜ., தலையிடாது,” என மாநில பா.ஜ., தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்தார்.பல்லாரியில்அவர் கூறியதாவது:

அமித் ஷா பெங்களூரில் இருக்கிறார். ஆனால், தலைமை மாற்றம் குறித்து எந்த விவாதமும் நடைபெறாது. பா.ஜ.,வுக்கும், மாநிலத்தில் நடந்து வரும் மத மோதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. எல்லாம் சரியாக அமையும்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் வகுப்புவாத கலவரங்கள், பயங்கரவாதம் மற்றும் நக்சல் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. நிர்வாகம் ஊழலற்றதாகவும் உள்ளது.எஸ்.ஐ., தேர்வு முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் பா.ஜ., தலையிடாது. திவ்யா ஹகரகி பா.ஜ., மகளிர் அணி மாவட்ட தலைவராக இருந்தது உண்மைதான்.

ஆனால், பா.ஜ., யாரையும் பாதுகாக்காது.காங்கிரஸ் ஆட்சியில் பல ஊழல்கள் நடந்துள்ளன. அவர்கள் யாரையும் காங்கிரஸ் விசாரிக்கவில்லை. ஆனால், பா.ஜ., ஆட்சியில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஓய்வு பெற்ற அதிகாரிகள், பிரதமருக்கு அனுப்பிய கடிதம் அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது. எனவே, அதை நம்ப வேண்டாம் என, மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments