வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பினை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் சந்தித்து பேசியதை, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றுள்ள காங்., – எம்.பி., ராகுல், அந்நாட்டின் தொழிலாளர் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜெர்மி கார்பினை சந்தித்து பேசினார். கடந்த 2015 – 20 வரையில் பிரிட்டன் பார்லி.,யில் எதிர்கட்சி தலைவராக இருந்த கார்பின், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அடிக்கடி தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில், கார்பின் – ராகுல் சந்திப்பு குறித்து பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ”சொந்த நாட்டுக்கு எதிராகவே ஒருவர் எத்தனை காலம் தன் செயல்படுவார்,” என, பா.ஜ.,வை சேர்ந்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.
பா.ஜ., பிரமுகர் கபில் மிஸ்ரா கூறுகையில், ”இந்தியா குறித்த ஜெர்மி கார்பினின் கருத்துடன் ராகுல் உடன்படுகிறாரா,” என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த காங்., செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ”ஜெர்மி கார்பினை பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசியுள்ளார். அவரது கருத்துக்களுடன் மோடியும் உடன்படுகிறாரா என்பதை பா.ஜ., தலைவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்,” என்றார்.
Advertisement