கனிமொழி என்ற பெண் ஒருவர் மட்டும் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அறந்தாங்கி போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் சம்பந்தப்பட பிரியாணிக் கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்குள்ள உணவுப் பொருள்களை ஆய்வு செய்தனர்
தொடர்ந்து, அந்த பிரியாணி கடைக்கு சீல் வைத்தனர். எதனால், பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம், உடல் நலக்கோளாறு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.