“கனா காணும் காலங்கள்’ ஓ.டி.டி.யில் வெளியாகி இருக்கிறதே…” என்றோம்.
“ஆமா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த சீரியலையும் ஓ.டி.டி. தளத்துக்குக் கொண்டு வந்திருக்காங்க. என்ன ரிசல்ட் கிடைக்குதுங்கிறதைப் போகப் போகத்தான் தெரிஞ்சுக்க முடியும்.
இதே ‘கனா’ தொடர் சம்பந்தப்பட்ட இன்னொரு செய்தி இருக்கு. மனசை ரொம்பவே கனமாக்குது.
‘இப்ப ஒளிபரப்பாகிற ஓ.டி.டி. கனா காணும் காலங்கள்’ சீசன்லயோ, அல்லது விஜய் டிவி தன்னுடைய வேறு ஏதாவது சீரியல்கள்லயோ தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்தா, அது தன்னுடைய குடும்பத்தை நல்லபடியா பாத்துக்க உதவும்’னு ‘கனா காணும் காலங்கள்’ காலேஜ் சீசன்ல நடிச்ச கணேஷ் பிரபு ரொம்பவே உருக்கமான ஒரு வேண்டுகோளை வச்சிருக்கார்.
ராஜபாளையம் பக்கத்துல இருந்து சினிமா, சீரியலுக்காக வந்தவர் இவர். பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட்ல நடிப்பெல்லாம் படிச்சவருக்கு ‘க.கா.கா.’ங்களுக்குப் பிறகு வாய்ப்புகளே அமையலை. ஆனாலும் இன்னும் மனசைத் தளர விடாமல் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்கிட்டப் பேசினேன்.
‘சில நேரம் கம்ப்ளீட்டா இந்த சினிமா எண்ணத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு வேற வேலைக்குப் போயிடலாமான்னு தோணும். அடுத்த சில நிமிடங்கள்லயே அந்த எண்ணம் காணாமப் போயிடுது. இதனாலயே கிட்டத்தட்ட இருபது வருஷமா போராடிட்டேதான் இருக்கேன். கல்யாணமாகி மனைவி. குழந்தைன்னு இருக்கறதால முழு நேரமும் சினிமாவுக்கான முயற்சியை மட்டுமே மேற்கொள்ள முடியலை. அவங்களுக்குமே என்னுடைய நிலைமை கஷ்டமா இருக்கு. ஆனா கூட சப்போர்ட் பண்றாங்க.
பல நாள்கள் சினிமாக் கம்பெனிக்குப் போறேன்னு மனைவிகிட்டச் சொல்லிட்டு ‘ராபிடோ’ டிரைவர் வேலைக்குப் போயிடுவேன். இப்படியே போயிட்டிருக்கிற இந்த நிலைமை ஒருநாள் மாறும்கிற நம்பிக்கை மட்டும் குறையலை’ங்கிறார்” என்ற பெருமாளு,
“கூல் ட்ரிங்க்ஸ் வேற இல்லையா, அதனால பசிக்கத் தொடங்கிடுச்சு, கிளம்பறேன்” என வண்டியைக் கிளப்பினார்.