Saturday, June 18, 2022
Homeஅரசியல் செய்திகள்பி.கே-வுக்கு பதில் சுனில்... 2024-ல் புதிய டீமுடன் பாஜக-வை வீழ்த்துமா காங்கிரஸ்?! | will congress...

பி.கே-வுக்கு பதில் சுனில்… 2024-ல் புதிய டீமுடன் பாஜக-வை வீழ்த்துமா காங்கிரஸ்?! | will congress defeat bjp in 2024 election with help of sunil?

2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் `நமக்கு நாமே’ பிரசாரத்தை சுனில்தான் வடிவமைத்தார். அந்த தேர்தலில் தி.மு.க வெற்றிபெறவில்லை என்றாலும், சுனில் வகுத்துக்கொடுத்த வியூகம் ஸ்டாலினின் இமேஜை உயர்த்தியது. அடுத்ததாக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அவர் பணியாற்றினார். அந்த தேர்தலில், 38 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரை தி.மு.க நாடிச்சென்றது. சுனில், அ.தி.மு.க-வுக்கு வியூகங்கள் வகுத்துக்கொடுத்தார்.

நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

தற்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகங்களை வகுப்பதற்கான குழுவில் சுனில் இடம்பெற்றுள்ளார். ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ள ‘டாஸ்க்ஃபோர்ஸ் – 2024’ குழுவில் சுனில் கனுகோலுவும் இடம்பெற்றிருக்கிறார்.

விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் இருந்தாலும், பிரதமர் மோடியின் செல்வாக்கு பெரியளவுக்கு சரிந்துவிடவில்லை. பா.ஜ.க பலமிழந்துவிட்டதா என்பதைக்காட்டிலும், சரிந்த செல்வாக்கை காங்கிரஸ் கட்சி எந்தளவுக்கு மீட்டெடுக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. தற்போதைய சூழலில், மத்தியில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. சுனில் கனுகோலு என்ன வியூகங்களை வகுத்துக்கொடுக்கப்போகிறார்… டாஸ்க்ஃபோர்ஸ் என்ன ஆலோசனை வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்துத்தான், தனக்கு எதிரான சவால்களை காங்கிரஸால் முறியடிக்க முடியும்.!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments