`பீர் வாங்கிக்கொடுக்க முடியுமா?!’ கோரிக்கையால் அதிரந்த நடிகர் சோனுசூட்! |Actor song sood’s reaction on people’s request through social media

நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். கொரோனா காலத்தில் வேலை வாய்ப்புக்களை இழந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சோனு சூட் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மும்பை மட்டுமல்லாது தனது தொண்டு நிறுவனம் மூலம் நாடு முழுவதும் இச்சேவையை செய்தார். சோனு சூட்டின் இந்த சேவையால் சோனு சூட்டிற்கு படங்களில் நடிக்க கிடைக்கும் வாய்ப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சோனு சூட் கொரோனாவிற்கு முன்பு பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்து வந்தார்.

சோனு சூட்

சோனு சூட்

ஆனால் இப்போது வில்லன் கதாபாத்திரம் தனக்குக் கிடைப்பதில்லை என்று சோனு சூட் வருத்தப்பட்டார். இது குறித்து சோனு சூட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நல்லவன் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டதால் யாரும் எனக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்க மறுக்கின்றனர். உண்மையான ஹீரோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யார் விரும்புவார்கள்?. யாரும் எனக்கு வில்லன் கதாபாத்திரத்தைக் கொடுக்க மறுக்கின்றனர். கொரொனாவிற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஒப்புக்கொண்ட படத்தில்கூட எனக்கு தக்கபடி கதை மாற்றுகின்றனர். படத்தில் என்னை நல்லவனாக காட்ட ஒட்டுமொத்த கதையும் மாற்றுகின்றனர் என்று தெரிவித்தார். சோனு சூட்டிடம் இப்போதும் சமூக வலைதளத்தில் மக்கள் உதவி கேட்டு தகவல்களை பதிவிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். இது தொடர்பாக சோனு சூட் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டில் சமூக வலைதளத்தில் ஏராளமான கோரிக்கைகள் வருகின்றன. சில நேரங்களில் பீர் வாங்கிக்கொடுக்க முடியுமா என்று கூட கேட்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். தற்போது எம்.டி.வி.யில் ஒளிபரப்பாகும் ரோடீஸ் என்ற நிகழ்ச்சியை சோனுசூட் நடத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

Source link

Leave a Comment

Your email address will not be published.