புதிய பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம்: இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 18 டெஸ்டில், 11 தோல்வி, 5 ‘டிரா’, 2 வெற்றியை பெற்றது. இதில் ஆஷஸ் தோல்வியும் அடங்கும். இதனால் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகினார். புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். இதேபோல நிர்வாக இயக்குனர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து முறையே ஆஷ்லே கில்ஸ், கிறிஸ் சில்வர்வுட் நீக்கப்பட்டனர். புதிய இயக்குனராக ராப் கீ நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் 40, நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் நடக்கும் 15வது ‘டி–20’ கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணிக்கு பயிற்சியாளராக உள்ள இவர், விரைவில் இங்கிலாந்து அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து மாதம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

Advertisementவருக

Leave a Comment

Your email address will not be published.