Thursday, June 23, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்புதுக்கோட்டை: தொழிலதிபரைக் கொலைசெய்து, நகைப் பணம் கொள்ளை! - குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை: தொழிலதிபரைக் கொலைசெய்து, நகைப் பணம் கொள்ளை! – குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாம்(53). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் வாசலில் நின்றுகொண்டிருந்த முகமது நிஜாமின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, வீட்டுக்குள் புகுந்து நிஜாமின் மனைவி ஆயிஷா பீவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சுமார் 170 பவுன் நகை, ரூ.20,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். தொழிலதிபரை வீடு புகுந்து கொலைசெய்து நகைகளைத் திருடிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மணமேல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் செல்போன் சிக்னல், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், இந்த வழக்கில் தொடர்புடைய ஆவுடையார்பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் முகமது யூசூப், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், சூர்யா, ஸ்ரீகாந்த், உலங்கோட்டையைச் சேர்ந்த ரித்தீஷ், இலுப்பூரைச் சேர்ந்த கதிரவன், லோகேஷ், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் ஆகிய 8 பேரைக் கைதுசெய்தனர்.

போலீஸ்

மேலும், அவர்களிடமிருந்து 62 பவுன் தங்க நகைகள், 188 கிராம் வெள்ளிப்பொருள்களை மீட்டனர்.

இந்தக் கொலைக் கொள்ளைச் சம்பவம் குறித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன், “கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் அழைப்புகள் குற்றவாளிகளைப் பிடிப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஜோஸ்மில்டன் என்பவர் தலைமறைவாகியிருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவரைக் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, தொடர் விசாரணை நடக்கிறது. மீதமுள்ள நகைகளைக் கைப்பற்றும் முயற்சியும் நடைபெற்று வருகிறது” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments