Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்புதுச்சேரியில் சட்டவிரோத பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

புதுச்சேரியில் சட்டவிரோத பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

சென்னை: புதுச்சேரி நகராட்சியில், சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகநாதன் தாக்கல் செய்த மனு: அனுமதியின்றி பிளக்ஸ் பேனர், விளம்பர போர்டுகள், வளைவுகள், கட் அவுட் வைக்கும் கலாசாரம், புதுச்சேரியில் உள்ளது. போஸ்டர், போர்டுகளுக்கு தடை விதித்து, அரசும் உத்தரவிட்டுள்ளது. இருந்தும், அரசு உத்தரவை அமல்படுத்துவது இல்லை. எனவே, புதுச்சேரியில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர், விளம்பர போர்டு, கட் அவுட்டுகளை அகற்ற, உத்தரவிட வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி, சட்டவிரோதமாக பேனர் வைத்தவர்களிடமே, அவற்றை அகற்றியதற்கான செலவையும் வசூலிக்கும்படி, புதுச்சேரி நகராட்சிக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில், பேனர்களை அகற்றவில்லை என, ஜெகநாதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆனந்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. ஒப்பந்ததாரர்களால் வைக்கப்பட்ட பேனர் மட்டுமே அகற்றப்பட்டதாகவும், அரசியல்வாதிகளால் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்படவில்லை என, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஞானசேகர் தெரிவித்தார். அதற்கான புகைப்பட ஆதாரங்களும் தாக்கல் செய்தார்.இதையடுத்து, சட்டவிரோத பேனர்களை அகற்றவும், அதுகுறித்த அறிக்கையை, இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments