Wednesday, June 29, 2022
Homeஅரசியல் செய்திகள்புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு தடைக் கோரிய வழக்கில் உத்தரவு

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கு தடைக் கோரிய வழக்கில் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலை தொடர, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., பிரமுகரும், புதுச்சேரி சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சிவா தாக்கல் செய்த மனு: கடந்த ஆண்டு செப்டம்பரில், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து, தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற அனுமதித்து, முரண்பாடுகளை களைந்து, ஐந்து நாட்களில் புதிய அறிவிப்பு வெளியிட, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டிருந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, புதிய அறிவிப்பை, அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். பின், உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்காக, வழக்கை வாபஸ் பெற்றேன்.மனுவில் எழுப்பிய பிரச்னை தொடர்பான எந்த வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுக, உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

தற்போது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் கமிஷன் கருதுகிறது. இது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். எனவே, புதுச்சேரியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அறிவிக்க, தடை விதிக்க வேண்டும். இடஒதுக்கீட்டை வாபஸ் பெற்ற உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆனந்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். இவ்வழக்கில், தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டு, விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments