Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் மர்மச் சாவு; வேலூர் விசிக நிர்வாகிமீது புகார்! - என்ன...

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் மர்மச் சாவு; வேலூர் விசிக நிர்வாகிமீது புகார்! – என்ன நடந்தது? | real estate proprietor mysteriously died complaint filed against vck cadre what happened

தொடர்ந்து, அங்கு வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ வைத்தியநாதன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நானும் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணனும் நண்பர்கள். அவரால்தான் நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். நிலத்துக்கு பதிலாக பணத்தைத் திருப்பித் தருவதாக அழைத்துத்தான் பேசியிருக்கிறார்கள். அப்போது, மிரட்டி போலி டாக்குமென்ட்டில் கையெழுத்தையும் வாங்கியிருக்கிறார்கள். இது, திட்டமிட்ட படுகொலை. சரவணன் வெளியூர் சென்றால் மது அருந்த மாட்டார். மது போதையில் தவறி விழுந்ததாக பொய் சொல்கிறார்கள். போலீஸாரும் சரியான கோணத்தில் விசாரணை நடத்தவில்லை. நிறைய அரசியல் குறுக்கீடும், தலையீடும் இருக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அந்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அந்தக் கட்சியின் நீல சந்திரகுமார் மீது ஏற்கெனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன’’ என்று குற்றம்சாட்டினார்.

நீல சந்திரகுமார்

நீல சந்திரகுமார்

குற்றச்சாட்டு குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமாரிடம் விளக்கம் கேட்டோம். “இறந்த நபர் எனக்கும் நெருங்கிய நண்பர். இந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் எங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து நடந்தவற்றை எஸ்.பி-யிடம் கூறியிருக்கிறோம். இறந்த சரவணனுக்கு ரூ.125 கோடிக்குக் கடன் இருக்கிறது. அவர் கடன் கேட்கத்தான் என்னைச் சந்திக்க வந்தார். மூன்று நாள்களாக சரவணன் எனக்கு போன் அடித்துக்கொண்டே இருந்தார். நானும் 10 கோடி ரூபாய் ஏற்பாடு செய்தேன். பணம் கொடுப்பதாகக் கூறிய நபரின் செல் நம்பரையும் சரவணனிடம் கொடுத்துவிட்டேன். அடுத்து, சேவூரில் இருக்கிற ஓர் இடத்தை விற்பனைக்குச் சொல்லியிருந்தார் அவர். பார்ட்டியையும் வரவழைத்து, அந்த இடத்தையும் நல்ல ரேட்டுக்குப் பேசி முடித்துக் கொடுத்தேன்.

இரண்டு வேலைகளும் சக்சஸ் ஆனதால், சரவணன் ரொம்ப ஹாப்பியாக இருந்தார். என்மேல் அன்பு பொழிந்து, முத்தம் கொடுத்தார். இதையடுத்து, அவரைச் சாப்பிடவைத்து வழியனுப்பி வைத்தேன். அதன் பிறகு, அவர் எப்போது மீண்டும் கட்டடத்தின் மேலே வந்தார், எப்படி விழுந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் நன்றாகக் குடித்துவிட்டுத் தவறி விழுந்ததாகத் தெரிகிறது. அவர் என்னிடம் பேசும்போது, `எனக்கு 55 வயசாகுது. இன்னும் திருமணம் ஆகலை. எனக்குத் திருமணம் ஆனால்தான் என் தம்பிக்குத் திருமணம் ஆகும். இப்போதான் மேட்ரிமோனியில் பெண் பார்த்திருக்கிறேன். திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது’ எனக் கூறினார். அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையெனில் செத்துப்போய்விடுவேன் என்றும் மனவேதனையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் விழுந்தது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்துவருகிறார்கள். என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக எதிர்த்தரப்பினர் முயல்கிறார்கள்’’ என்றார்.

நீல சந்திரகுமார் மீது ஏற்கெனவே கொலை முயற்சி உட்பட எட்டு வழக்குகள் இருப்பதாகவும், இந்த வழக்கில் அவர் மீதான சந்தேகம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்திவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments