Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிதியமைச்சருக்கு சாமிநாதன் நன்றி

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நிதியமைச்சருக்கு சாமிநாதன் நன்றி

புதுச்சேரி,-‘பெட்ரோல், டீசல் விலை குறைப்பை எதிர்க்கட்சிகள் பாராட்ட முன்வர வேண்டும்’ என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளர்.அவரது அறிக்கை:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளார். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைந்துள்ளார்.பல்வேறு நாடுகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தருணத்தில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப் பட்டுள்ளது.இதனால் ஏழைமக்கள், நடுத்தர மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் உற்பத்தியாளர்கள் பெரிய பலன் அடைவர் .சரக்கு வாகனங்களின் வாடகை குறைவதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்.கடந்த காலங்களில் ஆட்சி செய்த காங்., அரசு விலையை ஏற்றுமே தவிர, இதுபோன்று அதிகளவில் விலையை குறைந்ததில்லை.பெட்ரோல், டீசல் விலை உயரும் நேரங்களில் போராட்டம் நடத்திய காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சியினர், தற்போது அதிகளவில் விலை குறைத்துள்ளதை பாராட்ட முன்வர வேண்டும். புதுச்சேரி பா.ஜ., சார்பில் மத்திய நிதி அமைச்சருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments