Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்பெட்ரோல் விலை உயர்வு: ``மன்மோகன் சிங்கால் முடிந்தது; மோடியால் ஏன் முடியவில்லை!" - கே.எஸ்.அழகிரி |...

பெட்ரோல் விலை உயர்வு: “மன்மோகன் சிங்கால் முடிந்தது; மோடியால் ஏன் முடியவில்லை!” – கே.எஸ்.அழகிரி | ks alagiri slams modi government in petrol diesel price hike in thoothukudi

திருநெல்வேலியில் நடைபெறவுள்ள சோனியா காந்தி, காமராசர் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் டீசல், பெட்ரோல், சமையால் எரிவாயு சிலிண்டரின் விலை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மோடி அரசின் மிக மோசமான செயல்பாடுகளில் அதுவும் ஒன்று. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது உலகச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 108 டாலராக இருந்தது.

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

ஆனால், 70 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றார். சமையல் எரிவாயு சிலிண்டரை 400 ரூபாய்க்கு விற்றார். அதன் மீது போடப்பட்ட வரிவிதிப்பைக் குறைத்தார். ஆனால், தற்போதைய மோடி அரசு, கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 27 லட்சம் கோடி ரூபாயை அந்தப் பொருள்களின் மீது வரியாக விதித்திருக்கிறது. அந்த வரிவிதிப்புதான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையேற்றத்துக்குக் காரணமாக உள்ளது. ராமராஜ்யம் எனச் சொல்லக்கூடிய நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments