`பெண்ணுரிமை பேசிக்கொண்டே பெண்ணடிமையை ஊக்குவிப்பதுதான் திராவிட மாடலா?’ -திமுக-வுக்கு ஓபிஎஸ் கண்டனம் | ADMK MLA O. Panneerselvam slams DMK Government in Madurai mayor issue

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்தின்போது, தங்களுக்கு சீட் ஒதுக்காதது குறித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மேயர் இந்திராணியிடம் முறையிடச் சென்றனர். அப்போது, மேயரின் கணவர் அவர்களிடம் பஞ்சாயத்து நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது அதைப் படமெடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை தி.மு.க-வினர் தள்ளிவிட்டதில், செய்தியாளர்கள் இருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி

இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இந்தச் சம்பவம் தொடர்பாக தி.மு.க-வுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “மதுரை மாநகராட்சி மேயரின் கணவர், உறவினர்கள் மற்றும் அடியாட்களின் அலுவலக வருகை மற்றும் தலையீட்டுக்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களுக்கு பதிலாக அவர்களின் கணவன்மார்களும் உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல். ஒருபுறம் பெண்ணுரிமையைப் பற்றி பேசிக்கொண்டு, மறுபுறம் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிப்பது என்பது `படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. ஒருவேளை இதுதான் `திராவிட மாடல்’போலும். பெண் முதலில் தந்தைக்கு அடிமை, பின்னர் கணவனுக்கு அடிமை, அதைத் தொடர்ந்து மகனுக்கு அடிமை என்னும் பழமைவாதத்தை நோக்கிச் செல்வதுபோல இது இருக்கிறது.

ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

Source link

Leave a Comment

Your email address will not be published.