Saturday, July 2, 2022
Homeஅரசியல் செய்திகள்பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள் செய்த அற்புதம்; போராட்டம் செய்த மாயம்! | struggles and journey...

பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள் செய்த அற்புதம்; போராட்டம் செய்த மாயம்! | struggles and journey of arputhammal in perarivalan case

“நான் ஓர் அப்பாவி பையனின் தாய். 28 வருடங்களுக்கு முன்பு என்னிடமிருந்து பறிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயது. அன்று முதல் நான் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தேன், இன்னும் ஓடுகிறேன்..!” எனத் தன் ட்விட்டர் பயோவில் வைத்திருக்கும் அற்புதம்மாளின் ஓட்டத்துக்கு 31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஓய்வு கிடைத்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கும் பேரறிவாளனை இன்று (மே18-ம் தேதி) விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

அற்புதம்மாள்

அற்புதம்மாள்

அற்புதம்மாளின் பயணம் பூக்களின் மீதானதல்ல. தோள்பட்டையில் ஒரு பை; களைத்துப்போன முகத்தில் ஒரு நம்பிக்கை; ரப்பர் செருப்பு தேய தன் மகனின் விடுதலைக்காக அவர் நடந்த நடைகள்… எனக் கடந்த 31 ஆண்டுகளாகப் பல அரசியல் தலைவர்கள், பல கோரிக்கைக் கடிதங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என முற்களையே அவர் கடந்து வந்திருக்கிறார்.

`என் மகன் ஒரு நிரபராதி’ என்கிற வார்த்தையைக் கோடி முறை உச்சரித்திருக்கும் அற்புதம்மாள், இதையே வலியுறுத்தி தமிழக முதலமைச்சர்களுக்கும், மற்ற அரசியல் தலைவர்களுக்கும், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று, தன் மகனுக்காகப் போராடினார். `எப்படியாவது மகன் வீடு வர வேண்டும்’ என்ற அவரின் தொடர் போராட்டம், பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவைத்தது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments