Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர் - என்ன நடந்தது? |...

பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்; காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர் – என்ன நடந்தது? | departmental action was taken against a policeman who brutally attacked a bus conductor in Chennai

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் காவலர் ஒருவர் தனிநபர் ஒருவரைச் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்த நிலையில், காவலர் தாக்கியகாகக் கூறப்படும் நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், தாக்கப்பட்ட அந்த நபர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடத்துநராக பணிபுரிந்து வரும் பாலச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.

தாக்கிய காவலர்

தாக்கிய காவலர்

போக்குவரத்து ஊழியராக பணியாற்றும் பாலச்சந்திரன் இன்று காலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சர்ச்சுக்கு வந்துள்ளார். அதன்பின்பு, அங்கிருந்த கடையில் நின்று ஜூஸ் குடிக்கும்போது, அங்கே சாலையில் கீழே எச்சில் துப்பியிருக்கிறார். அப்போது, அந்த வழியாகச் சென்ற காவலர் லூயிஸ் மேல் எச்சில் பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த காவலர் போக்குவரத்து ஊழியரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments