பைத்தியம் என்று கிண்டலடித்த கணவர் : ப்ளாக்மெயில் செய்த அஞ்சனா – Anjana

பைத்தியம் என்று கிண்டலடித்த கணவர் : ப்ளாக்மெயில் செய்த அஞ்சனா

13 மே, 2022 – 12:33 IST

எழுத்தின் அளவு:


Anjana---Chandran-fun-video

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் ஒரு காலத்தில் மியூசிக் தொலைக்காட்சியின் நம்பர் 1 ஆங்கராக இருந்தார். இவருக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. கயல் திரைப்படத்தின் கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஞ்சனா, அதன்பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை. சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார். அதேசமயம் பெரிய சினிமா மேடை நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறார். கணவனும், மனைவியும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அஞ்சானா வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு வயலில் புல்லை பிடுங்கி விளையாடும் வீடியோவை ‘உனக்கு என்னப்பா நீ பைத்தியம்’ என்ற வசனத்துடன் இணைத்து வீடியோ மீம் ஆக வெளியிட்டுள்ளார் சந்திரன். இதைபார்த்து கடுப்பான அஞ்சனா, ‘எவ்ளோ நாளா இந்த ஆடியோவ மைண்ட்ல சேவ் பண்ணி வச்சு வெயிட் பண்ணிட்டிருந்த? நான் ரிவெஞ்ச்க்கு என்கிட்ட இருக்கிற வீடியோவ போஸ்ட் பண்ணவா?’ என கமெண்ட்டில் பதிவிட்டு ப்ளாக்மெயில் செய்துள்ளார். இவர்களின் குறும்புத்தனமான காதல் விளையாட்டை அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.Source link

Leave a Comment

Your email address will not be published.