Friday, June 24, 2022
Homeஅரசியல் செய்திகள்போலி வருவாய்த்துறை அலுவலகம்; சான்றிதழுக்கு ரூ.10,000... லட்சக்கணக்கில் முறைகேடு - கண்டுகொள்ளாத அரசு | Puducherry...

போலி வருவாய்த்துறை அலுவலகம்; சான்றிதழுக்கு ரூ.10,000… லட்சக்கணக்கில் முறைகேடு – கண்டுகொள்ளாத அரசு | Puducherry independent MLA allegation of fake revenue certificates are being issued by an individual person

புதுச்சேரி திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான அங்காளன், கடந்த 22.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் வல்லவனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “முதியவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி எனது தொகுதியைச் சேர்ந்த பெண்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுக்கும் குடியிருப்பு, குடியுரிமை, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை இணைத்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் வழங்குவார்கள். அதனடிப்படையில் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

வருவாய்த்துறை தாசில்தார் அல்லது துணை தாசில்தார் போன்றவர்களால் வழங்கப்படும் அந்தச் சான்றிதழ்களை, கலிதீர்த்தாள் குப்பம் மேயர் தெருவைச் சேர்ந்த N.ரமேஷ் என்பவர் பயனாளிகளிடம் ரூ.10,000/- பெற்றுக்கொண்டு போலியாக தயாரித்துக் கொடுத்துவருகிறார். அதற்காக தாசில்தார், துணை தாசில்தார்களின் பெயர்கள் பதித்த முத்திரையையும், தாலுகா அலுவலத்தின் முத்திரையையும் போலியாகத் தயாரித்து பயன்படுத்துவதுடன், அவர்களின் கையெழுத்தையும் இவரே போலியாகப் போட்டு போலிச் சான்றிதழ்களை விற்றுவருகிறார். மேலும், அந்தச் சான்றிதழ்களில் வருவாய்த்துறை அலுவலகத்தில் வழங்கப்படுகிற எண்களையும் (Despatch No) போலியாகக் குறிப்பிட்டுவருகிறார். ரமேஷ் என்ற நபர் போலியாகப் போடும் எண்களை (Despatch No.) வைத்து வருவாய்த்துறையில் சரிபார்த்தால், அந்த எண் உண்மையாக யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments