Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்மஞ்சப்பை: தொடங்கிய சில நாள்களில் இயந்திரத்தின் பரிதாப நிலை?

மஞ்சப்பை: தொடங்கிய சில நாள்களில் இயந்திரத்தின் பரிதாப நிலை?

இன்றைய நவீன உலகத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமானதால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கிறது. ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் பிளாஸ்டிக்கினால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இறக்கின்றன. சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசால் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகளை அரசு தடை செய்துள்ளது.

நெகிழிப்பை பயன்பாடு

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சந்தை, சென்னை கோயம்பேடு சந்தை ஆகும். மீண்டும் மஞ்சப்பை இயக்கம் திட்டத்தின் மூலமாக, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாஹூ அண்மையில் தொடங்கி வைத்தார். இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் நோட்டாகவோ, நாணயமாகவோ செலுத்தினால் போதும், தமிழ்நாடு அரசின் சின்னம் அச்சிடப்பட்ட மஞ்சப்பை வெளியில் வரும். இதன் மூலம் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நெகிழிப்பை பயன்பாட்டை குறைக்க முடிகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதன் பயன்பாட்டை அறிய நேரில் சென்று பார்த்தோம்.

நேரில் சென்று பார்த்தபோது சில நேரங்களில் மட்டுமே இயந்திரம் வேலை செய்கிறது. பல நேரங்களில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. மக்கள் பத்து ரூபாய் பணம் போட்டுவிட்டு மஞ்சப்பை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மஞ்சப்பை இயந்திரத்தில் ஸ்கேனர் மூலம் பணம் செலுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் அங்கு ஸ்கேனர் கொடுக்கவில்லை. இது கூடுதல் ஏமாற்றத்தை தருகிறது.

மஞ்சப்பை இயந்திரம் விதிமுறைகள்

இயந்திரத்தை பாதுகாக்க இரவு நேரங்களில் இரண்டு காவலர்களும், பகல் நேரங்களில் இரண்டு காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மஞ்சப்பை வராத நேரங்களில் ஏன் வரவில்லை உள்ளிருந்து எடுத்து தாருங்கள் என்று மக்கள் கேட்கும் போது அவர்கள் சரியாக பதிலளிப்பதில்லை. இந்த இயந்திரத்தில் மட்டுமல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான கடைகளில் துணிப்பை விநியோகிக்கின்றனர். இத்தனை வசதிகள் இருந்த போதிலும் இன்னும் மக்களின் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இன்னும் மக்கள் பிளாஸ்டிக் பையை பயன்படுத்துகின்றனர்.

தானியங்கி மஞ்சப்பை மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை நொறுக்கிப் போடும் இயந்திரமும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ளது. அதுவும் வேலை செய்யவில்லை என்று மூலையில் வைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

செயல்படாத நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி போடும் இயந்திரம்.

இது குறித்து கோயம்பேடு சந்தை நிர்வாக குழுவில் கேட்ட போது அவர்கள், மாவட்ட வருவாய்துறை அலுவலரிடம் கேளுங்கள் என்றார்கள். மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சாந்தியிடம் பேசியபோது, “பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மஞ்சப்பை இயந்திரத்தை கோயம்பேடு சந்தையில் நிறுவினோம். நாங்கள் அமைக்கும்போது சரியாகத்தான் இயங்கியது. ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகளால் இப்படி ஆகியிருக்கலாம். உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

‘மீண்டும் மஞ்சப்பை இயக்கம்’ பெயரளவில் மட்டும் இயங்காமல் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments