Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்மணிமேகலை: கிராமத்து விருந்துக்கு ரெடியான குக் வித் கோமாளி மணிமேகலை…! - rediana cook with...

மணிமேகலை: கிராமத்து விருந்துக்கு ரெடியான குக் வித் கோமாளி மணிமேகலை…! – rediana cook with clown hour for kida feast…! what a night!

சீரியலில் நடித்தாலும் சரி, நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்தாலும் சரி பலருக்கும் இப்போது யூடியூப் சேனல் சொந்தமாகஇருக்கிறது. அதற்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றனர். பிரபலங்கள் தங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் விஷயங்கள் முதல் பண்டிகைகள், விசேஷங்கள், கொண்டாட்டங்கள் என்று ஸ்பெஷல் நாட்களின் ஸ்பெஷல் தருணங்கள் வரை யூடியூபில் பகிர்வது வழக்கமாகியுள்ளனர்.

அந்த வகையில் யூடியூபில் மிகவும் ட்ரெண்டான ஜோடியாக வலம் வருபவர்கள் ஹுசைன் மற்றும் மணிமேகலை தம்பதி. இவர்கள் சமீபத்தில் வழங்கிய கிராமத்து கிடா விருந்து மிகப்பெரிய அளவில் வைரலாகி, பட்டி தொட்டியெங்கும் பகிரப்படுகிறது.

திருமண தேதியை குறித்த ஆதி – நிக்கி கல்ராணி: நட்சத்திர ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
தற்போது குக் வித் கோமாளியில் கோமாளியாக இருக்கும் மணிமேகலைக்குக் ஏகப்பட்ட ரசிகர்கள். சன் மியூசிக்கில் விஜே-வாக பணிபுரிந்த பலரும் மக்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமடைந்தவர்களாக உள்ளனர். அதன் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் தான் விஜே மணிமேகலை. கலகலப்பாக படபடவென்று பேசும் திறமையால் ஏராளமான ரசிகர்களைப்பெற்றுள்ளார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

பின்னர் இவர் ஒரு பாடலில் ஆடிய, உதவி நடன இயக்குனரான ஹுசைன் என்பவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் அவரைக் கண்டுபிடித்து தேடிப்போய் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதற்கு இருவரின் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்க, பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டில் காதலரை கரம் பிடித்து திருமண வாழ்வில் நுழைந்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
வசதியான வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் மணிமேகலை ஆரம்ப நாட்களில் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சன் நெட்வொர்க்கில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடந்த 2019-ல் தொழில் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டார். சன்டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறினார். முதலில் இவர் விஜய் டிவி-யின் சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின்பு விஜய் டிவி-யின் ஷோக்களை தொகுத்து வழங்க துவங்கினார். இறுதியாக இவர் மாபெரும் வெற்றி ஷோவான குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த காமெடி கலாட்டாக்கள் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமடைந்தார். ஹுசைனும் தனது கேரியரில் படிப்படியாக வளரத் தொடங்கினார். பின்னர், லாக்டவுன் சமயத்தில் மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் இணைந்து ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து வீடியோக்களை பதிவு செய்யத் தொடங்கினர். அதன் மூலம் அவர்களுக்கு மில்லியன் கணக்கில் வியூவர்ஸ்கள் கிடைத்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன், இவர்கள் தங்கள் சேனலில் அசலான கிராமத்து கிடா விருந்து என்று ஒரு வீடியோவைப் பகிர்ந்தனர். அதில், மணி மற்றும் ஹுசைன் இருவரும் எப்படி வீட்டிலிருந்து தயாராகி, கிராமத்துக்கு செல்கிறனர் என்பது தொடங்கி, விருந்து தயாராகும் காட்சிகள் வரை பகிர்ந்துள்ளனர். அழகான பச்சை நிற அனார்கலி டிரஸ்சில் மணி அழகாக இருந்தார். வழக்கம் போல டைமிங் காமடி மற்றும் கலாய்க்கும் தொனியில் வீடியோ முழுவதும் மணி மாஸ் செய்துள்ளார்.

அதற்கும் மேலே, வீடியோவைப் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊற வைக்கும் விதமாக அவ்வளவு ஐட்டங்கள்! தற்போது இவர்களுக்கு 15லட்சத்துக்கும் மேற்பட்ட யூடியூப் ஃபாலோயர்ஸ் உள்ளனர். அதே சந்தோஷத்தில் தனது வாழ்விலும் மணிமேகலை உயரத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த தம்பதி BMW சொகுசு கார் ஒன்றை வாங்கினர்.

இதனை சோஷியல் மீடியாவில் மிகவும் சந்தோஷத்துடன் ஷேர் செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஜோடி மற்றொரு புதிய காரை வாங்கி இருந்தார்கள். பெற்றோர்களின் எதிர்ப்போடு திருமணம் செய்திருந்தாலும், எல்லோர் முன்னிலையிலும் நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வருகின்றனர்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments