Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மதம் மாற ஒத்துழைக்காத காதலி அந்தரங்க போட்டாக்களை இணையத்தில் பதிவிட்ட இன்ஸ்டா காதலன் |21 yr...

மதம் மாற ஒத்துழைக்காத காதலி அந்தரங்க போட்டாக்களை இணையத்தில் பதிவிட்ட இன்ஸ்டா காதலன் |21 yr old denied to do religious conversion Insta lover leaked personal pictures

கண்களைப் பார்த்து பேசுவதை மறந்த இந்த தலைமுறையினர் பேஸ்புக் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என போனிலேயே குடும்பம் நடத்துகிறார்கள்.

அதில் வெகு சில ஜோடிகளே உண்ணை வாழ்வில் ஒன்று சேர்கின்றனர். ஆனால் நூற்றில் 70 சதவீதம் பேர் சிக்கலிலேயே மாட்டிக்கொள்கின்றனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

பெரும்பாலும் இந்த வலைகளில் பெண்களே சிக்கிக்கொள்கின்றனர். சிலர் மனமுடைந்து தற்கொலை வரையும் செல்கின்றனர். இவ்வாறு இணைய காதல் ஆபத்தானது என்று அறிந்தும் இளமை ஜோரில் களமிறங்குகின்றனர் இளைஞர்கள்.

மேலும் படிக்க | அடக்கடவுளே! யாருமே கிடைக்கலையா… குளத்தில் முதலையுடன் கட்டி பிடித்து நடனம் ஆடும் நபர்!

அவ்வாறு தமிழகத்தில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்ற இளைஞரும் கரூரைச் சேர்ந்த பவித்ரா (வயது 21) என்ற பெண்ணும் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில் இருவரின் நட்பும் வேகமாக வளர்ந்து காதலாக உருமாறியது. அதன் விளைவாக இருவரும் சந்தித்துக்கொண்டனர். மேலும் இருவருக்கும் பிடித்துபோக திருப்பூரில் இருவரும் ஒன்றாக வீடு எடுத்து பெற்றோருக்கு தெரியாமல் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

சில நாட்களே நிலைத்த காதல் சண்டைகளில் வந்து நின்றன. இருவரின் கருத்தும் வேறுபட்டது. குறிப்பாக மதம் குறித்து பேசும்போது பவித்ராவை மதம் மாறும்மாறு இமான் ஹமீப் வற்புறுத்தி வந்துள்ளார்.

இரண்டு மாதங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நிலையில் மதம் மாற வற்புறுத்தியதால் காதல் கசந்து போனது. பவித்ராவும் இமான் ஹபீப்பை  வெறுக்கத் தொடங்கினார். 

பின்னர் மதம் மாற பிடிக்காததால் பவித்ரா இமான் ஹபீப்பை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில், இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இமான் ஹமீப் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என தெரிகிறது.

மேலும் இது குறித்து கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பவித்ரா புகார் கொடுத்துள்ளார். 

அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நல்லூர் போலீசார் ஜாதியை சொல்லி திட்டியது, பெண்ணை கொடுமை செய்தது, அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இமான் ஹமீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments