Sunday, June 19, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மதுரை: பூரி, சோறு, ஆம்லேட்... ஹோட்டலாக மாறிய அம்மா உணவகம்?! - நடவடிக்கை எடுத்த கமிஷனர்|...

மதுரை: பூரி, சோறு, ஆம்லேட்… ஹோட்டலாக மாறிய அம்மா உணவகம்?! – நடவடிக்கை எடுத்த கமிஷனர்| Madurai amma canteen controversies and commissioner action

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகம் குறித்த சில சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. சில இடங்களில் போர்டுகள் அகற்றப்பட்டன. பின்னர் அ.தி.மு.க-வினர் எதிர்த்ததால் அம்மா உணவகம் வழக்கம்போலச் செயல்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் மதுரையிலுள்ள சில அம்மா உணவகங்களில் கலைஞர் கருணாநிதி படம் வைக்கப்பட்டதும் விவாதமானது. தற்போது நகரிலுள்ள 10 அம்மா உணவகங்களையும் மாநகராட்சியின் கண்காணிப்பில் மகளிர் குழுக்கள் செயல்படுத்திவருகின்றன.

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

இந்த நிலையில்தான் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு அம்மா உணவகங்களை அந்தந்தப் பகுதி தி.மு.க கவுன்சிலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

புதூர் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட தி.மு.க கவுன்சிலர் ஒருவர், மாநகராட்சி அனுமதித்துள்ள உணவுகளுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தியும், மதியத்தில் வழக்கமான கலவை சாதத்துக்குப் பதிலாக சோறு, சாம்பார், ரசம், மோர், ஆம்லேட் என வழங்க உத்தரவிட்டுள்ளாராம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments