வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பூஞ்ச்: காஷ்மீரை இரண்டாக பிரித்து இரண்டரை ஆண்டுகளாகியும் இங்கு வளர்ச்சி, அமைதியும் எங்கே என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு ஒமர் அப்துல்லா பேசியது, ஜம்மு – காஷ்மீருக்கு, அரசியல் சட்டத்தின், 370 மற்றும் 37 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இச்சட்டத்தை நீக்கினால் தான் காஷ்மீரில் அமைதியும், வளர்ச்சியும் நிலவும் என்றது மத்திய அரசு.
|
அது இங்கு நடந்ததா ? நேற்று ரியாஸ் அகமது தாக்கூர் என் போலீஸ் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். நமது சகோதாரர் ராகுல் பட் என்ற காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை வைத்து பார்த்தால் காஷ்மீரில் வளர்ச்சி எங்கே ?, அமைதி எங்கே ? இங்கு இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இதெல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாதது ஏன் இவ்வாறு ஒமர் அப்துல்லா பேசினார்.
Advertisement