Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மனைவிக்கு கொரோனா தொற்று... நிர்வாகிகளை சந்திக்காமல் தனிமைப்படுத்தி கொண்ட ஈபிஎஸ்

மனைவிக்கு கொரோனா தொற்று… நிர்வாகிகளை சந்திக்காமல் தனிமைப்படுத்தி கொண்ட ஈபிஎஸ்

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரத்தால் அரசியில் வட்டராத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 23- ஆம தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கெனவே பேசி முடிவெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 11- ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜூலை 11- ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இபிஎஸ்-ன் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான தொற்று இருப்பதால் அவர் தன்னை சேலத்தில் உள்ள வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு : முக்கிய கோரிக்கைகள் உடன் மீண்டும் நீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ்?

இதனிடையே எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று மதியத்திற்கு மேல் அவரை சந்திக்க வந்த கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்திக்கொண்டு, ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த நிலையில் அவர்கள் உடனடியாக திரும்பியும் சென்றுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments