மருத்துவ மாணவர்களுக்கு நீதி வேண்டும்: ராகுல் வேண்டுகோள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், அரசு அவர்களை நசுக்காமல் நீதி வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்னும் நிறைவுபெறாத நிலையில், நடப்பாண்டிற்கான முதுகலை நீட் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள ்கோரிக்கை விடுத்தன. மேலும், தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

latest tamil news

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறுகையில், ‛முதுகலை நீட் கவுன்சிலிங் தாமதத்திற்கு மாணவர்கள் காரணம் இல்லை. எழுத்து தேர்வை தள்ளி வைக்க சொல்லிய அவர்களின் கோரிக்கை நியாயமானது. மருத்துவர்கள் கொரானா காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். அரசு அவர்களை நசுக்காமல் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.