Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் - வசமாக சிக்கியது எப்படி? | Nellai youth...

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் – வசமாக சிக்கியது எப்படி? | Nellai youth who cheated on Malaysian woman arrest

மலேசியா நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கவிதா என்பவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் டவுனை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இம்ரான் என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு சமூக வலைத்தளங்கள் மூலம் நட்பு ஏற்பட்டு நண்பர்கள் ஆகியுள்ளனர். அப்போது, இம்ரான் துபாய் வேலைபார்த்து வந்த. சமூக வலைத்தள நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்போன் மூலம் இணைத்தது. இந்நிலையில் இம்ரான் மீது அளவுக்கதிகமான காதலை வைத்த கவிதா அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். காதலனிடம் திருமணம் செய்துகொள்ளக் கேட்டவரை தமிழகத்திற்கு கிளம்பி வரச்சொல்லியிருக்கிறார், இம்ரான். உடனே காதலனுக்காக குடும்பத்தினருடன் மலேசியாவில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார், கவிதா. பேசி முடித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு கோவிலில் கவிதா மற்றும் இம்ரானுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை பொறியாளர்

ஆசை ஆசையாக வாழ்க்கையை தொடங்கிய கவிதாவிற்கு அது நீண்ட நாள் நீடிக்காது என்பது தெரியாமல் போனது. திருமணம் முடிந்த சில நாட்களில் கவிதாவும் அவரது குடும்பத்தினரும் இம்ரானை அழைத்துக் கொண்டு மலேசியா சென்றுள்ளனர். அங்கிருந்து இம்ரான் சில நாட்களில் தனது பணி நிமித்தமாக துபாய் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.  துபாய் செல்லும் முன் கவிதாவிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பணிக்கு துபாய்க்கு சென்ற இம்ரான் தனது மனைவியிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்திருக்கிறார்.

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை பொறியாளர்

பலமுறை அதுகுறித்து கவிதா கேட்கும்போது மலேசியாவிலிருந்து திருநெல்வேலி  வர சொல்லியும், அப்படி வந்தால் மட்டுமே தொடர்ந்து குடும்பம் நடத்த முடியும் என கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே கவிதா கர்ப்பமமாக இருப்பது தெரியவந்தது. கர்ப்பிணியான மனைவி நெல்லை திரும்பி இம்ரான் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் அவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் தப்பித்து வந்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்து போன கவிதா,   மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை பொறியாளர்

மேலும் படிக்க | கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்து கட்டிய கொலைக்கார மனைவி..!

புகாரின் பேரில் இம்ரான் விசாரணைக்கு அழைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கவிதாவின் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதை அறிந்த நிலையில் இம்ரானை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | பரமக்குடி : பச்சிளம் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

 

 

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments