ராஜ் டிவியில் ஆங்கராக மீடியாவிற்குள் என்ட்ரியானவர் விகாஷ். பிறகு, சீரியலில் நடிக்கத் தொடங்கியவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனந்த விகடன் ஆங்கர் டு ஆக்டர் பகுதிக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.
“ஆரம்பத்தில் இவன்லாம் ஆங்கரான்னு என் முகத்துக்கு முன்னாடியே சிலர் கேட்டிருக்காங்க. ஆனாலும், பெஸ்ட் ஆங்கராக இருக்கணும் என்கிற எண்ணம் எப்பவும் எனக்குள்ள இருந்துச்சு. என் கேள்வித்திறனை வளர்த்துக்கிட்டேன். பல செலிபிரிட்டிகளிடம் ஆங்கரிங்கிற்காக பாராட்டும் வாங்கியிருக்கேன். நான் மீடியாவை தேர்ந்தெடுத்ததற்கான நோக்கமே சமூகசேவை பண்ணனும்னுதான்! நாம கொஞ்சம் பிரபலமா இருந்தால் இன்னும் நிறைய உதவிகள் பண்ண முடியும் என்கிற எண்ணத்தினால் மட்டும்தான் மீடியாவை தேர்ந்தெடுத்தேன். திரையில் எனக்கு ஹீரோவாக விருப்பம் இல்லை.. ஆனா, ரியல் லைஃப்பில் நான் ஹீரோ தாங்க!
திரையில் நான் பார்க்காத ஜெயம் ரவியை என்னுடைய நேர்காணலின்போது சந்திச்சேன். பார்க்கும்போது அவர் நல்ல மனிதர் என்பது தெரிஞ்சது. மனுஷன்னா இவரை மாதிரி இருக்கணும் என்பதை அவர்கிட்ட இருந்து நான் எடுத்துக்கிட்ட விஷயம். ஆரம்பத்தில் எல்லார்கிட்டேயும் சகஜமா பழகினது தவறாகிடுச்சு. அது இத்தனை வருட பயணத்தில் நான் கத்துக்கிட்ட பாடம். அமைதிதான் எல்லாத்துக்குமான பதில் என்பதை இப்ப புரிஞ்சுகிட்டு அப்படி இருக்க ஆரம்பிச்சியிருக்கேன்!’ இன்னும் பல விஷயங்கள் குறித்து விகாஷ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றை காண லிங்கை கிளிக் செய்யவும்.