Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கிறார் மாஜி முதல்வர்| Dinamalar

மீண்டும் தீவிர அரசியலில் குதிக்கிறார் மாஜி முதல்வர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கால்நடை தீவன வழக்குகள் அனைத்திலும் ஜாமின் கிடைத்துள்ள நிலையில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 73, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

latest tamil news

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, சட்டசபைக்கு 2025ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே, கால்நடை தீவன வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் கிடைத்தும், உடல்நிலை மோசமடைந்ததால், அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ள லாலு, டில்லியில் உள்ள தன் மகளும், ராஜ்யசபாஎம்.பி.,யுமான மிசா பாரதியின் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளார்.அடுத்த வாரத்தில் அவர் பீஹாருக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.வயது முதிர்வு மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டாலும், தன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால், லாலு அரசியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

latest tamil news

லாலுவுக்கு, ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள். மகன்களில் மூத்தவரான தேஜ் பிரதாப், எனக்குள் சிவன் வந்துள்ளார் என்று கூறி, பாம்புகளை கழுத்தில் அணிந்து வருகிறார். கட்சியை லாலுவின் இரண்டாவது மகன் தேஜஸ்வி யாதவ் கவனித்து வருகிறார்.கட்சியில் தனக்கு உரிய மரியாதை இல்லை என்று கூறி வரும் தேஜ் பிரதாப், விரைவில் கட்சியில் இருந்து வெளியேறப் போவதாக கூறி வருகிறார். இந்நிலையில் பீஹாருக்கு திரும்பும் லாலு, முதலில் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண திட்ட மிட்டுள்ளார். அதன்பின், தீவிர அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

– புதுடில்லி நிருபர் –

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments