முக்கிய ஆவணங்களை பாக்.,கிற்கு விற்ற விமானப்படை அதிகாரி கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராணுவத்தின் முக்கிய தகவல்கள், ஆவணங்களை பாக்.,கிற்கு விற்பனை செய்த விமான படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லியில் உள்ள விமான படை ஆவணக் காப்பகத்தில் நிர்வாக உதவி அதிகாரியாக பணியாற்றியவர், தேவேந்திர நாராயண் சர்மா. இவரை டில்லி போலீசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தேவேந்திர நாராயண் சர்மா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்திய ராணுவம், படை தளங்கள் பற்றிய முக்கிய விபரங்களை, ‘வாட்ஸ்ஆப்’ வாயிலாக அனுப்பிஉள்ளார். இதற்காக அவர் ஒரு ஏஜன்ட் வாயிலாக பணம் பெற்றுள்ளார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் தேவேந்திர நாராயண் வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு ராணுவ ரகசியங்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட கணினி, மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தேவேந்திர நாராயண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

4 சி.பி.ஐ., அதிகாரிகள் சிக்கினர்

சி.பி.ஐ., அதிகாரிகள் நான்கு பேர், சண்டிகரில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்திற்குச் சென்று போலியாக சோதனை நடத்தியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்ட இந்த சோதனை குறித்து அந்நிறுவன அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் அளித்த புகாரில் போலீசார் சி.பி.ஐ., அதிகாரிகளை கைது செய்தனர்.

இதற்கிடையே அந்த நான்கு சி.பி.ஐ., அதிகாரிகளும் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ”சி.பி.ஐ.,யில், ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு ஒருபோதும் இடமில்லை. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை சி.பி.ஐ., பொறுத்துக் கொள்ளாது,” என, சி.பி.ஐ., இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.