முக்கிய புள்ளி பெயரை சொல்ல தைரியம் உள்ளதா? பா.ஜ., அரசுக்கு மாஜி முதல்வர் குமாரசாமி சவால்| Dinamalar

ஹாசன்:”எஸ்.ஐ., தேர்வு முறைகேட்டின் முக்கிய புள்ளியின் பெயரை சொல்ல அரசுக்கு தைரியம் உள்ளதா. அந்த நபரை பார்த்தால், அனைவரும் அஞ்சுகின்றனர்,” என ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.
எஸ்.ஐ., தேர்வு முறைகேடு குறித்து ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணாவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:எஸ்.ஐ., தேர்வு முறைகேடு தொடர்பாக பா.ஜ.,வில் யாரும் பேசுவதில்லை. அங்குள்ள வருங்கால தலைவர் பெயர் சொல்ல கூட தைரியமில்லை. விசாரணையில் தோண்ட தோண்ட பல்வேறு தேர்வு முறைகேடுகள் பகிரங்கமாகிறது.
மாகடியில் எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இருவரிடம், தலா 80 லட்சம் ரூபாய் பெற்று கொண்டதாக காங்கிரசார் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர்.முறைகேட்டின் முக்கிய புள்ளியின் பெயரை சொல்ல அரசுக்கு தைரியம் உள்ளதா. அந்த நபரை பார்த்தால், அனைவரும் அஞ்சுகின்றனர்.
இந்த பா.ஜ., ஆட்சியில் எந்த துறையாவது நேர்மையாக செயல்படுகிறதா. லஞ்சம் பெறுவதை தடுக்க ஆங்காங்கே நாங்கள் குழு நியமிக்க வேண்டும். உயர்கல்வி துறையில் கோடிக் கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் அஸ்வத் நாராயணாவின் தொல்லை தாங்க முடியாமல், சில அதிகாரிகள் நீண்ட விடுப்பில் சென்றுள்ளனர். பென்ஷன் வழங்க ஒதுக்கப்பட்டிருந்த 1,350 கோடி ரூபாயை, வேறு திட்டங்களுக்கு மாற்றினார்.துறையில், ஏ.பி.வி.பி., – ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை சிண்டிகேட் உறுப்பினர்களாக்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவை சேர்ந்த அதிகாரி ஒருவர், உயர்கல்வி துறையின் கமிஷனராக நியமிக்கப் பட்டு, கெஸ்ட் ஹவுஸ்களில் பேரம் நடத்துகிறார். எந்தெந்த இடங்களில் கெஸ்ட் ஹவுஸ்களில், என்னென்ன செய்கின்றனர் என்று நன்றாக தெரியும்.இத்தகைய அரசை பார்த்தும், சிறப்பாக ஆட்சி செய்கிறீர் என்று அமித் ஷா புகழ்ந்து சென்றார். கர்நாடகாவில் எவ்வளவு கொள்ளை அடித்தாலும், அதை கண்டுகொள்ளாமல், ஆட்சிக்கு வருவது எப்படி என்பது தெரியும் என கூறியுள்ளார்.விரைவில் எந்தெந்த துறையில், என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்று பட்டியலிட்டு சொல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.