முதல்வரை சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்
08 மே, 2022 – 12:17 IST
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும், தம்பதிக் அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற இருமகள்களும் உள்ளனர். தற்போது ஏஆர்.ரகுமானின் முதல் மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இஞ்ஜினியர் ரியாஸ்தீனுகும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எளிய முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார். அப்போது கதீஜா மற்றும் ரியாஸ்தீன், முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். அதோடு வரும் மே 10ம் தேதி கும்மிடிப்பூண்டியில் நடைபெற உள்ள தனது மகள் திருமண அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின்போது முதல்வரிடன் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.