Thursday, July 7, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்``முதல்வர் லண்டன்; செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து; அமைச்சர்களுக்கு துபாய் வியாதி” - அண்ணாமலை

“முதல்வர் லண்டன்; செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து; அமைச்சர்களுக்கு துபாய் வியாதி” – அண்ணாமலை

மதுரை மாநகர பாஜக சார்பில் மத்திய அரசின் எட்டு ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. மாநகரச் செயலாளர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் பிரமாண்டமாக நடந்த இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன், மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டனர்.

அண்ணாமலை

அண்ணாமலை பேசும்போது , “திரண்டு வந்த தொண்டர்களை காவல்துறையாலும், அரசாலும், வருண பகவானாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசுமுறைப் பயணமாக ஆப்பிரிக்கா சென்றிருந்த அமைச்சர் முரளிதரன், நான் அழைத்ததற்காக இந்தியா வந்து இறங்கியவுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.

உக்ரைன் போர் நடந்தபோது அவ்வளவு நெருக்கடியான சூழலிலும் நாம் எத்தனை மணிக்குத் தொடர்புகொண்டாலும் பேசுவார். அவரால்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பத்திரமாக ஊருக்கு வந்தனர். இலங்கையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படும்போதெல்லாம் அவருக்குத் தகவல் சொல்வோம். அதனால், மீனவர்கள் சிறையிலிருந்து மீடக்கப்பட்டனர். அவருக்கு நன்றி சொல்கிறேன்.

அண்ணாமலை

அமைச்சர் முரளிதரன் மத்திய அரசின் சாதனையைப் பற்றிப் பேசினார். நான் திமுக அரசின் வேதனையைப் பற்றிப் பேசுகிறேன். தி.மு.க அரசின் ஆட்சியை திராவிட மாடல் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். சினிமா மாடல் ஆட்சிதான் நடக்கிறது.

சம்பந்தமில்லாமல் முதலமைச்சர் பள்ளிகளுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் சர்ப்ரைஸ் ஆய்வு செய்யப்போகிறார். ஆனால், அவங்க டி.வி கேமராமேன் அங்கு தயாராக இருக்கிறார். அவர் செல்வதற்கு முன்பே அந்த இடம் ஷூட்டிங் ஸ்பாட்டாகிவிடுகிறது. அவர் எப்போது போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு செய்ய ஆரம்பித்தாரோ அப்போதிருந்து தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

மதுரை பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை தமிழ்நாட்டில் நடந்ததே இல்லை. தற்போது அதிகமாகியிருக்கிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.

ஊழலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அமைச்சர் மூர்த்தி கட்டுப்பாட்டிலுள்ள பத்திரப்பதிவுத்துறையில காலையில் ஒரு அதிகாரி டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டால் மாலையில் மீண்டும் அதே இடத்துக்கு வந்துவிடுகிறார்.

தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் நிலத்தைப் பதிவுசெய்தார்கள். அதைத் தடுத்து நிறுத்தியது பா.ஜ.க-தான். அதைப் பற்றி மூர்த்தியிடம் கேட்டால், அது எங்க ஆட்சியில் நடக்கலை. கடந்த ஆட்சியில் நடந்ததாகச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் துறையில் நடக்கும் மோசடிகள் பற்றி அவருக்குத் தெரியவில்லை. அவருடைய எண்ணம் முழுவதும் மதுரை மாவட்டத்தில் கல் குவாரிகளை திறப்பதில்தான் குறியாக உள்ளது.

அண்ணாமலை

மதுரையின் இன்னோர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் எதுவும் கேட்கவே முடியாது. கேட்டால் என்னைப் பற்றி தெரியுமா… என் தந்தையைப் பற்றித் தெரியுமா… தாத்தாவைப் பற்றி தெரியுமா என்றுதான் பேசுகிறார். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கூடாது என்பார். ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை மத்திய அரசு கொடுத்துவிட்ட பின்பும் எவ்வளவு நிலுவை இருக்கிறது என்று தெரியவில்லை என்று உளறுகிறார்.

தமிழ்நாடு அமைச்சர்களுக்கு தற்போது துபாய் வியாதி வந்திருக்கிறது. முதலமைச்சரைத் தொடர்ந்து ஒவ்வோர் அமைச்சரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள். முதலமைச்சர் அடுத்து லண்டன் செல்லவிருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்காட்லாந்து செல்லவிருக்கிறார். எதற்கு என்று கேட்டால், கடலில் காற்றாலை அமைத்திருப்பதைப் பார்க்க செல்கிறார் என்கிறார்கள். கடலில் சென்று அணிலால் மின்கம்பியைக் கடிக்க முடியாது என்பதால் அதில் ஆர்வம் காட்டுகிறாரா என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் சோலார் பிளான்ட் அமைக்க லஞ்சம் கேட்கிறார். இதைச் சொன்னால் என்மீது வழக்கு தொடுக்கிறார்.

இதுவரை தி.மு.க கட்சியாலும், அமைச்சர்களாலும் என் மீது 620 கோடி ரூபாய் அளவுக்கு மான நஷ்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து தி.மு.க ஊழலைச் சொல்வேன்.

மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு சீண்டினால் மதுரை மக்களே பதிலடி கொடுப்பார்கள். மக்கள் பக்கமிருந்து பேசும் ஆதீனத்தின் பக்கம் பா.ஜ.க இருக்கும்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மோசடி தொடர்பாக ராகுலிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த தமிழ்நாட்டிலிருந்து சென்ற காங்கிரஸ் எம்.பி-க்கள் டெல்லி போலீஸ், சட்டையைக் கிழித்துவிட்டது என்கிறார்கள். சண்டையில் சட்டை கிழியத்தான் செய்யும்… நீங்கள் ஏன் டெல்லி போனீர்கள்?” என்று பேசினார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments